“இந்தியாவிலேயே தொழில் முதலீட்டில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் உள்ளது. முதலீட்டாளர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு என்னை சந்திக்க, தமிழ்நாட்டுக்கு முதலீடுகளைக் குறித்து ஆலோசிக்க நேரம் ஒதுக்கக் கோரிக்கை வைத்துள்ளனர். நான் அங்கு இருக்கும் நாட்களே போதாது எனக் கருதுகிறேன். முதலீட்டை ஈர்க்க மகிழ்ச்சியுடனும், உறுதியுடனும் செல்கிறேன்!" என சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.