ஜமீன் பல்லாவரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் என்பவரை காதலித்துவந்துள்ளார். இருவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனையடுத்து மூன்றே மாதத்தில் திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை எனவும், தன்னுடன் பணியாற்றும் பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறி சதீஸ்குமார் கூறியுள்ளார். மேலும், இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டி 20 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சதீஸ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.