சிறுமி கர்ப்பம்: 9 பேர் போக்சோ வழக்கில் கைது

21634பார்த்தது
சிறுமி கர்ப்பம்: 9 பேர் போக்சோ வழக்கில் கைது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களாகவே சிறுமிக்கு உடல்நிலையில் மாற்றம் தென்பட்டது. இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் 4 மாதம் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியிடம் விசாரணை செய்ததில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்திலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் உடுமலை மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்த நிலையில் ஜெய காளீஸ்வரன், மதன்குமார், பரணி குமார் உட்பட 9 பேரை போக்சோவில் நேற்று(மே 12) இரவு கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.