இணையும் கவின் - நயன்தாரா ஜோடி

77பார்த்தது
இணையும் கவின் - நயன்தாரா ஜோடி
நடிகர் கவின் - நடிகை நயன்தாரா இணையும் புதிய படம் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இப்படத்தை இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித் குமார் தயாரிக்கவுள்ளார்.‌ "டாடா" படத்திற்கு இசையமைத்த ஜென் மார்டின் இசையமைக்கிறார். முதல்முறையாக கவினும், நயன்தாராவும் இணைய உள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி