விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு மதுரை விளாச்சேரியில் பாரம்பரிய மண்பாண்ட தொழிலாளர்கள் விநாயகர் சிலைகள் செய்து வருகின்றனர். மட்பாண்ட பொருட்களில் விநாயகர் சிலை மற்றும் லட்சுமி, பார்வதி, சிவன், உள்ளிட்ட கொழு பொம்மைகளும் தயார் செய்யப்படுகிறது. 4 முதல் 8 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் வரை தயாராகிறது. கஜமுக விநாயகர், நந்தி விநாயகர், சிம்ம விநாயகர், மூஷிக விநாயகர் உள்ளிட்ட பல விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது.