5 மாவட்டங்களில் இலவச வைஃபை சேவை!

47830பார்த்தது
5 மாவட்டங்களில் இலவச வைஃபை சேவை!
சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,000 இடங்களில் இலவச வைஃபை சேவை வசதி ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த அவர், ரூ.1,100 கோடி மதிப்பில் கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்டும். தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் 13,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். எல்காட் ரூ.200 கோடி மதிப்பீட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் தரம் உயர்த்தப்படும். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி