தமிழகத்தில் ஆர்டிஇ திட்டத்தின் மூலம் மாநிலம் உள்ள 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் ஏழைக் குழந்தைகள் இலவச கல்வி பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரைகட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். 2013 இல் அமலான இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 4.60 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இந்நிலையில், வரும் (2024-25) கல்வி ஆண்டில் இலவச சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு ஏப்ரல் 22 தொடங்கி மே 20ஆம் தேதி வரை நடக்க உள்ளது.