பஞ்சாப் முன்னாள் நிதி அமைச்சருக்கு மாரடைப்பு

58பார்த்தது
பஞ்சாப் முன்னாள் நிதி அமைச்சருக்கு மாரடைப்பு
பஞ்சாப் முன்னாள் நிதி அமைச்சர் மன்பிரீத் சிங் பாதலுக்கு (61) ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக பதிண்டாவில் உள்ள ஜிண்டால் இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மன்பிரீத் சிங் பாதலுக்கு இரண்டு ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் குணமடைவார் என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்பிரீத் சிங் கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி