முன்னாள் அமைச்சரின் தந்தை கொடூரக் கொலை

52பார்த்தது
முன்னாள் அமைச்சரின் தந்தை கொடூரக் கொலை
பீகார் மாநிலம் தர்பங்காவில் முன்னாள் மாநில அமைச்சர் முகேஷ் சாஹ்னியின் தந்தை ஜிதன் சாஹ்னி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். ஜிதன் சாஹ்னி அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இவரது வீடு சுபால் பஜாரில் உள்ள அப்ஸ்லா பஞ்சாயத்தில் உள்ளது. தர்பங்கா எஸ்எஸ்பி ஜெகநாத் ரெட்டி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். கொலையாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி