மக்களவை தேர்தலில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர்?

55பார்த்தது
மக்களவை தேர்தலில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர்?
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் பாஜக எம்பி வேட்பாளராக யுவராஜ் சிங் போட்டியிடுவார் என சமூக வலைதளங்களில் பரவலான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதுதவிர யுவி தனது தாயார் ஷப்னத்துடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்ததால் இந்த பிரச்சாரம் உண்மை என நெட்டிசன்கள் விவாதிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி