அரசியலில் களமிறங்கும் முன்னாள் முதல்வரின் மனைவி

70பார்த்தது
அரசியலில் களமிறங்கும் முன்னாள் முதல்வரின் மனைவி
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஷிபுசோரனிடம் அவரது மருமகள் கல்பனா சோரன் ஆசி பெற்றார். ஹேமந்த் சோரனை சந்தித்த பிறகு ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் தளத்தில் அவர் இதனை அறிவித்தார். ஜார்கண்ட் மக்களின் விருப்பப்படி தான் அரசியலுக்கு வருவதாகவும், ஹேமந்த் சோரன் மக்கள் மத்தியில் வரும் வரை தனது குரலை ஒலிப்பேன் என்றும் கூறினார். நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கடந்த மாதம் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி