4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு...

1513பார்த்தது
4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு...
லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதனால், இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போல், காலை 10 மணி வரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி