ஒலிம்பிக் வரலாற்றில் செயின்ட் லூசியா முதல் முறையாக பதக்கம் வென்றுள்ளது. ஒலிம்பிக் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் செயின்ட் லூசியாவைச் சேர்ந்த 23 வயதான ஜூலியன் ஆல்ஃப்ரெட் தங்கப் பதக்கத்தை தனதாக்கியுள்ளார். பந்தய தூரத்தை 10.72 வினாடிகளில் கடந்த அவர், சர்வதேச சாதனையை தனதாக்கியுள்ளார். இப்போட்டியில் நடப்பு உலக சம்பியனான ஷா'காரி ரிச்சர்ட்சன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். செயின்ட் லூசியாவை சேர்ந்த அவர் தனது நாட்டிற்கு முதல் பதக்கத்தை வழங்கிய பெருமைக்குரியவராகிறார்.