"குடும்பஸ்தன்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

78பார்த்தது
"குடும்பஸ்தன்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படம் வெளியானது. இளைய தலைமுறையிடம் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியான வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது, 'நித்தம் ஒரு வானம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான சினிமாக்காரன் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை நக்கலைட்ஸ் யூட்யூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு 'குடும்பஸ்தன்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி