துப்பாக்கியுடன் ரீல்ஸ் செய்த பெண் யூடியூபர்

71பார்த்தது
பிரபல வட இந்திய பெண் யூடியூபர், துப்பாக்கியுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல யூடியூபரான சிம்ரன் யாதவ் என்ற இளம்பெண் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், லக்னோவில் உள்ள நெடுஞ்சாலையில் துப்பாக்கியை பிடித்துக் கொண்டு பாடலுக்கு நடனமாடினார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இளம்பெண் துப்பாக்கியை பயன்படுத்தி வீடியோ எடுத்தது சட்டப்படி தவறு என கூறி பலரும் இந்த வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.