கோவில் அர்ச்சகருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

79பார்த்தது
கோவில் அர்ச்சகருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விருகம்பாக்கம் மகளிர் போலீசார் கார்த்திக் முனுசாமியை நேற்று (மே 28) கைது செய்தனர்.

கோவிலுக்கு சாமி கும்பிட வந்த தன்னை காரில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாகக் கூறி தன்னிடம் அர்ச்சகர் அத்துமீறியதாகவும், மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி