ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. (வீடியோ)

50பார்த்தது
நியூ மெக்சிகோவில் உள்ள அல்புகர்கி சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று (மே 28) ராணுவ விமானம் புறப்படும் போது திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. தீ மளமளவென எரிந்து விமானம் முற்றிலும் தீக்கிரையானது. அமெரிக்காவின் F-35 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் விமானி பத்திரமாக உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்கான காரணங்கள் மற்றும் சம்பவம் குறித்த முழு விவரம் இன்னும் தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி