திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம்

53பார்த்தது
திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால்குடம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர். தைப்பொங்கல் திருநாளான இன்று (ஜன., 14) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

தொடர்புடைய செய்தி