நாடு முழுவதும் இன்று முழு அடைப்புக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கங்களும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பாரத் பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் விதமாக இந்த பாரத் பந்த் நடைபெற உள்ளது. வட இந்தியாவில் இந்த போராட்டம் கொஞ்சம் தீவிரமாகவே இருக்கும் என்பதால் அங்கு இந்த சேவைகள் எல்லாம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் இதனால் பெரிய அளவில் சேவைகள் பாதிக்காது.