தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் கட்டண குறைப்பு

59பார்த்தது
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் கட்டண குறைப்பு
சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் புதிய முனையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், அதற்கேற்ப கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் ரூ.460 வரை வசூலிக்கப்பட்ட நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் அதே பேருந்துக்கு கட்டணம் ரூ.430 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.