வடிவேலுவுடன் மீண்டும் இணையும் ஃபகத் ஃபாசில்

584பார்த்தது
வடிவேலுவுடன் மீண்டும் இணையும் ஃபகத் ஃபாசில்
மாமன்னன் படத்தை தொடர்ந்து, வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகும் படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மாமன்னன் படத்தை தொடர்ந்து இருவரும் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இந்த தகவலை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தனது சூப்பர் குட் பிலிம்ஸ் புரொடக்ஷன் பேனரில் 98-ஆவது படமாக தயாரிக்க உள்ளார். வி கிருஷ்ண மூர்த்தி கதை எழுத, இயக்குனர் சுதீஷ் ஷங்கர் என்பவர் இப்படத்தை இயக்க உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி