கேரட் விலை சரிவு - விவசாயிகள் வேதனை

64பார்த்தது
கேரட் விலை சரிவு - விவசாயிகள் வேதனை
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பல ஏக்கர் நெற்பயிர்கள் சேதமாகியுள்ளது. அதேபோல், அதிக அளவு கேரட்டுகள் சாகுபடி செய்யப்படும் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பல ஏக்கருக்கு சாகுபடி செய்யப்பட்டு இருந்த கேரட் மழையால் நாசமாகின. மேலும், இதன் காரணமாக கேரட் விலையும் சரிந்துள்ளதால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி