திருவள்ளுவர் காவி புகைப்படம்: செல்வப் பெருந்தகை கண்டனம்

75பார்த்தது
திருவள்ளுவர் காவி புகைப்படம்: செல்வப் பெருந்தகை கண்டனம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து ஆளுநர் மாளிகை புகைப்படத்தை வெளியிடுவது சட்டத்திற்குப் புறம்பானது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். ஆளுநர் வெளியிட்ட அழைப்பிதழில் காவி உடை தரித்த திருவள்ளுவரின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், அரசுடமையாக இருந்த சாதி, மத, சமய சார்பற்ற திருவள்ளுவரின் புகைப்படம், 1991இல், நாட்டுடமையாக்கப்பட்டது. அதன் பிறகு, அந்தப் புகைப்படத்தை நாட்டில் உள்ள அனைவரும் அச்சிட்டு பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படிச் செய்வது கண்டனத்திற்குரியது. வருத்தத்திற்குரியது என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி