ஆரோக்கிய நடைபாதை விரிவாக்கம்

60பார்த்தது
ஆரோக்கிய நடைபாதை விரிவாக்கம்
ஆரோக்கிய நடைபாதை விரிவாக்கம் செய்யப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெசன்ட் நகரில் ஆரோக்கிய நடைபாதை அமைக்கப்பட்டது போல், எம்.கே.பி. நகர் மத்திய நிழற்சாலை, மேற்கு நிழற்சாலை, மீனாம்பாள் சாலை, சத்திய மூர்த்தி நகர் பிரதான சாலை, ரிதர்டன் சாலை, ஆர்.ஏ.புரம் 2வது பிரதான சாலை, நங்கநல்லூர் 4,5,6 பிரதான சாலை மற்றும் பழைய திரு.வி.க. பாலம் ஆகிய இடங்களில் ஆரோக்கிய நடைப்பாதைகள் அமைக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி