"மத்திய அரசு ஊழியர்கள், காலை 9.15 மணிக்குள் அலுவலகத்துக்கு வர வேண்டும்"

64பார்த்தது
"மத்திய அரசு ஊழியர்கள், காலை 9.15 மணிக்குள் அலுவலகத்துக்கு வர வேண்டும்"
மத்திய அரசு ஊழியர்கள், காலை 9.15 மணிக்குள் அலுவலகத்துக்கு வர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் பணிக்கு வர வேண்டும். அந்த நேரத்துக்குள் வராத பட்சத்தில் அரை நாள் சாதாரண விடுப்பு கழிக்கப்படும். மூத்த அதிகாரிகள் உட்பட அனைத்து ஊழியர்களும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையைப் பயன்படுத்த வேண்டும். அதிகாரிகள் தங்கள் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களின் வருகை மற்றும் நேரமின்மையை கண்காணிப்பார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி