இளைய தளபதி விஜய் என குறிப்பிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் வாழ்த்து

61பார்த்தது
இளைய தளபதி விஜய் என குறிப்பிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் வாழ்த்து
இளைய தளபதி என்று லட்சக்கணக்கான ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களின் 50-வது பிறந்தநாளில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அவரை மனதார வாழ்த்துகிறேன் என அதன் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கலைத்துறையின் மூலம் தமிழக மக்களின் குறிப்பாக, இளைஞர்களின் அன்பையும், பேராதரவையும் பெற்று வருகிற அவர் வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற்று, பொது வாழ்க்கையில் மேலும் சேவைகளை தொடர்ந்து செய்திட வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி