மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த விவசாயிகள் இன்று டெல்லிக்கு பேரணியாகச் செல்கின்றனர். ஆனால், அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் காவல்துறை கலைக்க முயற்சித்தது. இந்நிலையில் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட 21 வயதான சுபகரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார். டெல்லி எல்லையில் 21 வயது சுபகரன் சிங் என்ற விவசாயி கழுத்தில் ரப்பர் குண்டு பாய்ந்ததால் உயிரிழந்தார். ஒன்றிய அரசைக் கண்டித்து போராடி வரும் விவசாயிகள் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.