பரட்டையா இருந்தாலும் ஒரிஜினல் முடி..! தமிழிசை ஆவேசம் (Video)

81பார்த்தது
இணையதளவாசிகளை அடக்கி வைக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். “தேர்தலில் தோல்வி என்பது எல்லாருக்கும் வரும், என்னை மீண்டும் பரட்டை என கிண்டல் செய்கின்றனர். இது பரட்டை என்றாலும் ஒரிஜினல் தலைமுடி. என் முகத்தை விகாரமாக சித்தரித்து வெளியிடுகின்றனர். நான் அழகி என சொல்லிக் கொள்ளவில்லை, மக்களுக்காக அழுக்காக தான் இருப்போம்.

40-க்கு 40 வென்று என்ன செய்யப் போகிறீர்கள்? நாடாளுமன்றத்தில் வெறுமனே கலாட்டா செய்து வெளிநடப்பு தான் செய்வீர்கள், பாஜக - அதிமுக கூட்டணி நீடித்திருந்தால், அதிக இடங்களில் வென்றிருப்போம். 2026 தேர்தல் கூட்டணி வாய்ப்புகள் குறித்து தற்போது பேச முடியாது” என்றார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி