ஈரோடு மாவட்ட கட்டிட பொருட்கள் விற்பனையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அச்சங்க தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் நாராயணசாமி, செயலாளர் பாலு என்ற தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சின்னச்சாமி நிதிநிலை அறிக்கை சமர்பித்தார். ஆண்டறிக்கையை இணை செயலாளர் குமார் சமர்பித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார், கதைக்களம் நிறுவனர் வனிதாமணி அருள்வேல் வணிகமும், குடும்பமும் என்ற தலைப்பில் பேசினார். இந்த கூட்டத்தில், கட்டிட கட்டுமான பொருட்களின் மீது பல்வேறு சதவீதமான ஜிஎஸ்டி வரியை, ஒரே மாதிரியாக 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மேட்டூர் சாலையில் 5க்கும் மேற்பட்ட திரையங்குகள் உள்ளதால் கூட்ட நெரிசல், வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்து செல்கிறது. எனவே, மேட்டூர் சாலையில் கனரக வாகனங்களுக்கு ஒரு வழிப்பாதையாகவும், இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் இரு வழிப்பாதையாக மாற்றிட மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.