சத்தியில் பண்ணாரி அம்மன் சப்பரம் திருவீதி உலா

1555பார்த்தது
சத்தியில் பண்ணாரி அம்மன் சப்பரம் திருவீதி உலா

ஈரோடு மாவட்டம், சத்தி அடுத்த திண்டுக்கல் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற குண்டம் திருவிழாவை முன்னிட்டு மார்ச் மாதம் 11-ந் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் உற்சவ சிலைகளை சப்பரத்தில் வைத்து பூக்களால் அலங்கரித்து வீதி உலா புறப்பட்டனர். பல்வேறு கிராமங்கள் வழியாக சென்ற சப்பரம் சத்தி வந்தடைந்தது. பின் வடக்குப்பேட்டையில் உள்ள தண்டுமாரியம்மன் கோவிலில் சப்பரம் தங்க வைக்கப்பட்டது. காலை 6. 30 மணிக்கு அம்மனின் சப்பரம் தாரை, தப்பட்டை, வாத்தியங்கள் முழங்க திருவீதி உலா புறப்பட்டது. வடக்குப்பேட்டை, கிட்டே கவுடர் வீதி, சந்தனடிப்போ வீதி, குலாலர் வீதி, கடைவீதி, அக்ரகாரம் வழியாக திருவீதி உலா சென்று இரவு அங்குள்ள வேணுகோபால சாமி கோவிலில் தங்க வைக்கப்பட்டது. வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலைகளில் தண்ணீர் ஊற்றி பண்ணாரி அம்மன் வரவேற்றனர். இன்று18 ம் தேதி திங்கட்கிழமை
ரங்கசமுத்திரம், எஸ். ஆர். டி, கோணமூலை, காந்திநகர் மற்றும் திம்மையன்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வழியாக முத்துமாரியம்மன் திருக்கோயிலை சென்றடைதல்,
இரவு கோட்டு வீராம்பாளையம் சௌடேஸ்வரியம்மன் திருக்கோயிலில் தங்குகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி