17 அடி உயரம் கொண்ட ஒரே கல்லினால் ஆன சிவலிங்கம்

58பார்த்தது
சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் சுமார் 17 அடி உயரம் கொண்ட ஒரே கல்லினால் ஆன சிவலிங்கம் பிரதிஷ்டை நேற்று(செப்.2) செய்யப்பட்டுள்ளது. இவ்வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தனவாசி கரடு பகுதியில், ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் நிர்மாணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது இந்த ஆலய வளாகத்தில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆலயத்தில் ஒரே கல்லினால் ஆன சுமார் 12 டன் எடையும் 17 அடி உயரமும் கொண்ட ஒரு லட்சத்து எட்டு லிங்கங்கள் அடங்கிய சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யும் வைபவம் நடைபெற்றது.

முன்னதாக, திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க இந்த பிரமாண்ட சிவலிங்கம் கிரேன் மூலம் பீடத்தில் நிலை நிறுத்தப்பட்டது. பின்னர் 17 அடி உயரமுள்ள இச்சிவலிங்கத்திற்கு திருமஞ்சனம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேக பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற அலங்கார பூஜை மற்றும் தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி