ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடைகள்.

81பார்த்தது
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடைகள்.
ஈரோடு குமலன்குட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா இணைச் சீருடைகள் (2 ஜோடி) வழங்கும் நிகழ்ச்சி இன்று (29ம் தேதி) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா இணைச் சீருடைகளை வழங்கினார்.

ஈரோடு மாவட்டத்தில், 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 43, 231 மாணவர்களும், 43, 082 மாணவியர்களும் என மொத்தம் 86, 313 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா இணைச் சீருடைகள் வழங்கப்படுகிறது. இதன் மதிப்பீடு ரூ. 5. 91 கோடி ஆகும்.

அதன்படி, குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு முதல் 8ம் ஆம் வகுப்பு வரை பயிலும் 142 மாணவர்கள் மற்றும் 118 மாணவியர்கள் என மொத்தம் 260 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா இணைச் சீருடைகள் வங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜி. வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே. செல்வராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பெல்ராஜ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Where: தாளவாடி

தொடர்புடைய செய்தி