மின் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

79பார்த்தது
மின் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் வகையிலான மின் கட் டண உயர்வை உடன் திரும்ப பெற வேண்டும். மின் கட்டணத்தை மாதம் தோறும் கணக்கீடு செய்ய வேண்டும். மின் வினியோகத்தை தனியாருக்கு வழங்கும் மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மாநில உரிமைகளை பறிக்கும் உதய் மின் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஈரோடு மாநகர், மாவட்டத்தில் கம்யூ. , கட்சியினர்

சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன்படி ஈரோட்டில், இ. கம்யூ. , வட்டார செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப் பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் ராஜமாணிக்கம், ரவிசந்திரன், வெங்கடேஷ் முன்னிலை வகித் தனர். தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன், கோரிக்கை குறித்து பேசினார். மாவட்ட பொருளாளர் ரமணி, வட்டார குழு உறுப் பினர் மகாலிங்கம், பொருளாளர் மகேஷ் உட்பட பலர் பேசினர்.

தொடர்புடைய செய்தி