அதிமுக டீ-சர்ட் மற்றும் கலகத்தின் 2024ம் வருட காலண்டர்கள்

82பார்த்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக இளைஞரணி கூட்டம் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. பண்ணாரி முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னால் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு என்னை வளர்த்து விட்டது சத்தியமங்கலம் இங்கு கூடியுள்ள இளைஞர்கள் கூட்டத்தை பார்த்தால் நாம் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது என தெரிவித்தார்.

பின்னர் கலக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் 2024 நியூ இயர் கேக் வெட்டி கொண்டாடிய அவர் அதிமுகவினர் அணைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வரழ்த்துகளை தெரிவித்தார் அதன் பின்னர் இளைஞர் அணியினருக்கு கட்சி சின்னம் பொறித்த டீசர்ட்டுகள் கலகத்தின் புது வருட காலண்டர்களை வழங்கினார்.
கூட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட ஜடி விங்க் செயலாளர் செந்தில் (எ) கோடிஸ்வரன் சத்தி நகர செயலாளர் ஓ. எம் சுப்பிரமணியம் சத்தி நகர இளைஞர் அணி செயலாளர் வக்கில் நவீன், பவானிசாகர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி ஈரோடு மாவட்ட மகளிர் அணி இனைச் செயலாளர் தமிழ் செல்வி முன்னாள் ஊராட்சி குழுதலைவர் செல்வம், விவசாய அணி வெங்கிடு மற்றும் நகர பேரூராட்சி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :