தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி பசு மாடு பலி

71பார்த்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வட்டம் ஒசூர் பகுதியில் மூர்த்தி என்பவரின் பசு மாடு சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தது. அப்பகுதியில் உள்ள செயல்படாத குவாரியில் பதுங்கியுள்ள சிறுத்தை தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருவதால், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து, கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், செயல்படாத நிலையில் உள்ள குவாரி சிறுத்தைகளின் வசிப்பிடமாக மாறியுள்ளதால் குவாரியை மூட வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி