விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை உடனடியாக வழங்க கோரி மனு

54பார்த்தது
விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை உடனடியாக வழங்க கோரி மனு
தட்கல் திட்டத்திலும் மற்றும் அனைத்து வகையான வேளாண் மின் இணைப்பு திட்டங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக காக்க வைக்கப்பட்டு உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் உரிமை மின் இணைப்புகளை உடனடியாக வழங்க கோரி 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈரோட்டில் உள்ள மின்வாரிய மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் தலைமை பொறியாளர் அலுவலங்களில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு ஈவின் சாலையில் உள்ள மின்வாரிய மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் உரிமை மின் இணைப்புகளை வழங்கக்கோரி 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளிக்கும் இயக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் தமிழகம் முழுவதும் தட்கல் திட்டத்திலும் மற்றும் அனைத்து வகையான வேளாண் மின் இணைப்பு திட்டங்களிலும் முன் பணம் செலுத்திய பிறகும் கடந்த மூன்று ஆண்டுகளாக காக்க வைக்கப்பட்டு உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்காமல் மின்வாரியம் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி