பெருந்துறை: சட்டவிரோதமாக தங்கியிருந்த 20 வங்கதேசத்தினர் கைது

62பார்த்தது
பெருந்துறை: சட்டவிரோதமாக தங்கியிருந்த 20 வங்கதேசத்தினர் கைது
பெருந்துறை பணிக்கம்பாளையம், கிருஷ்ணம்பாளையம் பகுதியில் அதிக அளவில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பெயரில் வங்காள தேசத்தில் இருந்து அகதிகளாக வெளியேறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஊடுருவி தங்கி இருப்பதாக காவல்துறைக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் சென்றன.

இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் படி நேற்று(அக்.8) இரவு பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் பெருந்துறை போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது அப்பகுதியில் தங்கி இருந்தவர்கள் வைத்திருந்த ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் தங்கியிருந்த 20க்கும் மேற்பட்ட வங்க தேசத்தை சேர்ந்த அகதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விடிய, விடிய விசாரணை நடத்தினர்.

விசாரணை குறித்து பெருந்துறை போலீசாரிடம் கேட்டபோது, விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நபர்கள் வைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் தான் வங்காள தேசத்திலிருந்து புலம்பெயர்ந்து சட்டவிரோதமாக இங்கு தங்கியுள்ளவர்கள் குறித்த முழு விவரம் தெரிய வரும் என்று தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி