குன்னத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. நடைபெற்ற முகாமில் கம்மாளகுட்டை, கொமரக்கவுண்டம்பாளையம், நல்லி கவுண்டம்பாளையம், புதுப்பாளையம், குறிச்சி ஆகிய ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை கொடுத்தனர். முகாமில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய்த்துறை, மின்வாரியம், ஆதிதிராவிட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, கூட்டுறவு துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, தொழிலாளர் நலத்துறை ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்தனர். பொதுமக்களிடமிருந்து மொத்தம் 787 மனுக்கள் பெறப்பட்டது. நடைபெற்ற முகாமில் ஊத்துக்குளி தாசில்தார் சரவணன், ஊத்துக்குளி யூனியன் பி டி ஓ சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ) சுப்பிரமணி, குன்னத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி , நகர செயலாளர் சென்னியப்பன், உட்பட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.