மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் உடல் தானம்.

72பார்த்தது
மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் உடல் தானம்.
ஊத்துக்குளி அருகே மூதாட்டி ஒருவர் தான் இறந்த பிறகு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தனது உடலை தானம் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில் சகோதரியின் ஆசையை சகோதரர் நிறைவேற்றியுள்ளார்.

ஊத்துக்குளி அருகே உள்ள எஸ். காத்தாங்கண்ணி ஊராட்சி ,   பாப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மின்னல்கொடி என்கிற சரசு (68) என்பவர்  தனது மறைவிற்குப் பின் மருத்துவ மாணவர்கள் ஆய்வுக்காக தனது  உடலை தானம் செய்ய வேண்டும் என்று விருப்பத்தின் பேரில் பதிவு செய்து வைத்திருந்தார்.   சரசுவுக்கு வாரிசுகள் யாரும் இல்லாததால், தனது சகோதரர் பராமரிப்பில் இருந்து வந்தார்.   இந்நிலையில் சிறிது காலம் உடம்புக்கு முடியாமல் படுக்கையில் இருந்த சரசு அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காலமானார்.   இதையடுத்த அவரது  விருப்பத்தின்படி உடலை அவரது சகோதரர் குழந்தைசாமி மற்றும் உறவினர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்வி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அரசு விதிமுறைகளின் படி தானமாக வழங்கினார்கள். உரிய அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். அவரது இரு கண்களும் ஈரோடு அரசன் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.  

இந்த சமூகப்பணிக்கு ஊத்துக்குளி தாசில்தார் சரவணன், அரசு மருத்துவமனை( பொ) மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், ஆகியோர் தேவையான ஏற்பாடுகளையும், உதவிகளையும் செய்து கொடுத்தனர்.

தொடர்புடைய செய்தி