சென்னிமலை அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நார்கள் எரிந்து சேதமடைந்தன.
சென்னிமலையை அடுத்த குப்பிச்சிபாளையம் பகுதியில் தங்கராசு என்பவருக்குச் சொந்தமான தேங்காய் நார் மில் செயல்பட்டு வருகிறது. இங்கு தயார் செய்யப்பட்டிருந்த தேங்காய் நார்கள் மில் வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. அதில், நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதனைப் பார்த்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். முடியாததால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் தேங்காய் நார்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய்கள் எனக் கூறப்படும் நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து, சென்னிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.