ஈரோடு மாவட்டத்தில் இன்று செப்.5ல் மாநில நல்லாசிரியர் விருது பெறும் 11 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நம்பியூர் சாவக்கட்டு பாளையம் அரசு மேல்நிலை பள்ளி முதுகலைஆசிரியர் (தமிழ்) கந்தசாமி, ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கோபால், அந்தியூர் ஆலாம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், சித்தோடு அரசு மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) நளினா, தாளவாடி தலமலை அரசு உண்டு உறைவிட உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் வேம்படிதுரை ஆகியோர் தேர்வாகி உள்ளனர். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா பர்வீன் நல்லாசிரியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி பிரிவில் அம்மாபேட்டை குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி இடைநிலை ஆசிரியர் பூபதி ராஜா, செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி இடைநிலை ஆசிரியர் ஸ்ரீதேவி, மொடக்குறிச்சி கிளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) உமா மகேஸ்வரி, பவானி கிழக்கு நகராட்சி நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி வித்யா, அந்தியூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பள்ளி கல்வி துறையினர், சக ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்