ராஜஸ்தான் மாநிலம் சோனாரி கிராமத்தை சேர்ந்தவர் கைலாஷ் இவர் தற்போது ஈரோட்டில் பெரியசேமூர் பகுதியில் தங்கி வீடுகளுக்கு தேவையான கண்ணாடி கொண்டு செய்யப்படும் அலங்கார வேலைகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தம்பியான 16 வயது சிறுவன் ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டில் தொடர்ந்து செல்போனில் ப்ரீ ஃபயர் என்ற விளையாட்டை விளையாடி கொண்டு இருந்ததால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக ஈரோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அந்த சிறுவனை அனுப்பி வைத்தனர். அங்கும் அந்த சிறுவன் செல்போனில் ப்ரீ ஃபயர் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி சிறுவன் செல்போனில் கேம் விளையாடியபோது அவர் சகோதரர் கண்டித்தார்.
இதனால் கோபமடைந்த சிறுவன் வீட்டை விட்டுச் சென்றார். இதனை தொடர்ந்து சகோதரர் கைலாஷ் உட்பட உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்காததால் கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுவனை சிசிடிவி உள்ளிட்ட கண்காணிப்பு பணிகள் மூலம் தேடியதில் சிறுவன் ரயில் மூலம் பெங்களூர் சென்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சாமியார் ஆசிரமத்தில் இருப்பது தெரிய வந்தது.