ஆந்திர மாநிலம் திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கின் கொழுப்புகள் சேர்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தை கண்டித்தும் இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் கோயில்களில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஈரோடு வஉசி பூங்கா மைதான வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் முன்பாக , இந்து முன்னணி சார்பில் தேங்காய்கள் உடைக்கும் போராட்டம் இன்று (செப்.29) நடைபெற்றது.