சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் குழாய் உடைப்பு

80பார்த்தது
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் குழாய் உடைப்பு. புறவழிச் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த போது குழாய் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக ஆறு போல சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.


ஈரோடு மாவட்டம் பவானி அருகே பவானி ஆறு மற்றும் காவிரி ஆறு கலக்கும் பகுதியில் இருந்து குழாய் மூலம் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் புரவலைச் சாலை இல்லாமல் இருந்த நிலையில் புறவழிச் சாலை அமைப்பதற்கான பணியில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் புறவழிச்சாலை அமைக்கும் பணியின் போது சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் ஆறு போல வீணாக சாலையில் சென்றது. இதனைத் தொடர்ந்து குழாய் மூலம் தண்ணீர் செல்லும் பகுதி உடனடியாக நிறுத்தப்பட்டு உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி