வருகளரான வரும் 30ல் கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவு
ஈரோடு மாவட்டத்தில் துாய்மை பாரத இயக்கம் திட்டத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற, திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை உறுதி 'செய்யப்படுகிறது. இதன்படி 'ஆஸ்பிரிங்–(ஆர் வலர்]' என வகைப்படுத்தப்பட்ட, 28 பஞ். , களை 'உயரும்' நிலைக்கும், 119 பஞ். , களை ‘திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாதிரி (ஓ. டி. எப். , ] நிலைக்கு கொண்டு செல்லவும், குடிநீர் இணைப்பில் தன்னிறைவு நிலை அடைந்த, 45 பஞ். , களை ‘குடிநீரில் தன்னிறைவு' பெற்ற பஞ். , களாகவும் தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது. வரும், 30ம் தேதி காலை, 11: 00 மணிக்கு நடக்கும் இக்கிராமசபை கூட்டத்தை கண்காணிக்க வட்டார மற்றும் பஞ்சாயத்து அளவிலான பற்றாளர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். கிராமசபை நடக்கும் இடம், நேரம் தொடர்புடைய பஞ்சாயத்து மூலம், மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று, கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.