மாவீரர் தீரன் சின்னமலையின் 268ஆவது பிறந்த விழா

1069பார்த்தது
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளான ஏப்ரல் 17ஆம் தேதி ஆண்டுதோறும் அரசு அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று தீரன் சின்னமலையின் 268ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் பிறந்த இடமான, ஈரோடு மாவட்டம் அறச்சலூா் அடுத்த ஓடாநிலையில் உள்ள, தீரன் சின்னமலை மணிமண்டபத்தில், அவரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆண்டுதோறும் நடைபெறும் தீரன் சின்னமலையின் பிறந்தநாள் விழாவில் அரசு சார்பிலும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தீரன் சின்னமலையின் மணி மண்டபத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் வட்டாட்சியர் சதீஷ் செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி சுகுமார் உதவி மக்கள் தொடர்பு துறை அதிகாரி கலைவாணி என அரசு அதிகாரிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி