கோபியில் பழங்குடி மக்கள் ஆர்ப்பாட்டம்

66பார்த்தது
பழங்குடி மக்களுக்கும் சாதி சான்று வழங்கிட வேண்டுமென்றும், ஈரோடு மாவட்டம் பர்கூர் , மற்றும் கடம்பூர் பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட வேண்டுமென்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தினை நடத்துவதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் படி கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர், மற்றும் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி மற்றும் மலையாளி இனத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஒன்று திரண்டு
மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் தங்க்வேல் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வன உரிமை சட்டத்தின் படி பழங்குடினரின்
அனுபவத்தில் உள்ள நிலங்களுக்க பட்டா வழங்கிட வேண்டுமென்றும்,
மலைப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை துவக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி