பண்ணாரி வனப்பகுதியில் உயிரிழந்து கிடந்த பெண் யானை

3982பார்த்தது
பண்ணாரி அருகே உடல் நலம் குன்றிய யானை சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வனப்பகுதி குய்யனூர் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை படுத்து கிடப்பதாக சத்தி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறையினர் சென்று பார்த்தபோது 40 - 45 வயது மதிக்கத்தக்க பெண் யானை நடக்க முடியாமல் படுத்து கிடந்ததை கண்டறிந்தனர். அதன் அருகே 2 வயது குட்டியும் இருந்தது. இதையடுத்து அந்த குட்டி யானைக்கு புற்கள் கொடுத்து விட்டு பெண் யானைக்கு டாக்டர்கள் குழு ஊசி மூலம் குளுக்கோஸ் மற்றும் மருந்துகள் செலுத்தி சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த யானை விஜி பலன் இன்றி உயிரிழந்தது. யானை பிரேத பரிசோதனைக்கு பின் அங்கே குழி தோண்டி புதைக்கப்பட்டது. குட்டி யானை யானைகள் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டது. யானைகள் கூட்டம் அங்கேயே முகாமிட்டு சுற்றி வருகின்றன. இதையடுத்து வனத்துறையினர் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு டிரோன் மூலம் குட்டி யானையை கண்காணித்து வருகின்றனர். சத்தி புலிகள் காப்பாக வனப்பகுதியில் யானையில் உயிரிழப்பு அடுத்தடுத்து நடைபெற்று வருவது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி