ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததால் அதன் பின் தேர்தல் நடத்தை விதிகளில் சிலவிலக்குகள் அளிக்கப்பட்டன. அதன் பின்னர் கர்நாடக மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் மட்டும் பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கர்நா டக மாநில தேர்தல் முடிந்ததும் அங்கும் சில தளர்வுகள் அறி விக்கப்பட்டன.
தற்போதைய நிலையில் மாவட்ட அளவில் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வகையில் 330 வழக்கு கள் பதியப்பட்டு ரூ. 5 கோடியே 71 லட்சத்து 61 ஆயிரத்து 354 மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
314 வழக்குகளில் உரிய ஆவணங்களை காண்பித்து ரூ. 3 கோ டியே 73 லட்சத்து 5 ஆயிரத்து 272 மதிப்பிலான பொருள்கள் மற்றும் பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீத முள்ள 16 வழக்குகளில் ரூ. 1 கோடியே 98 லட்சத்து 56 ஆயி ரத்து 82 மதிப்பிலான பணம் மற்றும் பொருள்களை மாவட்ட கருவூலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற விசாரணை முடிந்து நீதிமன்ற உத்தரவின்படி இவ்
வழக்குகளில் உள்ள பணம் மற்றும் பொருள்களை ஒப்படைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.