ஃபெஞ்சல் புயலானது, காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்க உள்ள நிலையில், மாமல்லபுரத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள கல்பாக்கத்தில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, 13 அடி வரை கடல் அலை எழுந்து கடல் கடுமையான கொந்தளிப்புடன் காணப்படுகிறது. புயல் இன்று (நவ., 30) பிற்பகல் கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.